ETV Bharat / bharat

உத்தவ் தாக்ரே, சரத் பவாருடன் ஆலோசனை.. அரவிந்த் கெஜ்ரிவால் காய் நகர்த்தலின் பின்னணி என்ன?

டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்ட விவகாரத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிப்பதாக மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.

Arvind Kejriwal
Arvind Kejriwal
author img

By

Published : May 24, 2023, 7:54 PM IST

மும்பை : டெல்லியில் அதிகாரிகள் பணி நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலன அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றுவது குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்தது. இதனால் டெல்லியை அளும் ஆம் ஆத்மி அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே சுமூக உறவு நீடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் பணி நியமனம் மற்றும் பணி மாற்ற அதிகாரம் துணை நிலை ஆளுநரிடம் இருப்பதன் காரணமகா குடிமைப் பணி உள்ளிட்ட அதிகாரிகள் டெல்லியை அளும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் மெத்தனமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் நியமனத்தில் கூட அதிகாரம் இல்லாததால் ஆம் ஆத்மி அரசு அதிகாரம் அற்ற அரசாக காணப்பட்டது.

இந்த நிலையை எதிர்த்து கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரிகளை நியமனம் மற்றும் பணி மாற்றம் குறித்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் இந்த அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் ஆம் ஆத்மி தரப்பில் முறையிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அதில் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டசபைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனநாயக ஆட்சியில் நிர்வாகத்தின் உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மாநில அரசின் ஆட்சியையோ, நிர்வாகத்தையோ நிர்வகிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்றும் டெல்லியை பொறுத்த அளவில் நிலம், பொது ஒழுங்கு, காவல் துறை ஆகியவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் செய்வது, அதிகாரிகளை மாற்றம் செய்வது ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது என்று கூறி உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், டெல்லியில் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதற்கு டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கும் வகையில் மத்திய அரசின் அவசரச் சட்டம் இருப்பதாக ஆம் ஆத்மி அரசு விமர்சனம் செய்தது. இந்நிலையில், இந்த அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேசிய அளவிலான எதிர்க் கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் பணியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு உள்ளார்.

அதன் ஒருபகுதியாக அண்மையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜியை சந்தித்து அலோசனை நடத்தினார். இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவை சந்தித்து அரவிந்த் ஜெஜ்ரிவால் ஆதரவு திரட்டினார். இதற்காக டெல்லி முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மான் உள்ளிட்டோர் மும்பை சென்றனர்.

சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மும்பையில் உள்ள உத்தவ் தாக்ரேயின் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூட்டத்தை தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு எதிராகவும், ஆம் ஆத்மி கட்சி மற்றும் டெல்லி மக்களுக்கும் முழு ஆதரவு அளிக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே உறுதி அளித்ததாக தெரிவித்தார். மேலும் இந்த அவசரச் சட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க உத்தவ் தாக்ரே ஒப்புக் கொண்டதாக அரவிந்த் ஜெக்ரிவால் கூறினார்.

அப்படி மாநிலங்களவையில் அவசரச் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தால், அது பாஜகவுக்கு அரையிறுதி ஆட்டம் போன்றது என்றும் 2024 ஆம அண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒருபோதும் பாஜக ஆட்சியை பிடிக்காது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். மாநிலங்களவையில் சிவசேனா உத்தவ் அணியின் பலம் 3 எம்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : RBI Governor : பணவீக்கத்தின் மீது போர்... வட்டி விகிதங்கள் குறித்து உண்மை உடைத்த ஆர்.பி.ஐ கவர்னர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.