கரோனா ஊரடங்கு காரணமாக டெல்லியில் மேம்பட்டிருந்த காற்று மாசு கடந்த சில வாரங்களாகவே மீண்டும் மோசமான நிலைக்குத் திரும்பியுள்ளது. இதன் காரணமாக குழந்தைகளும், வயதானவர்களுகும் மூச்சுவிடுவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதில் என்சிஆர் எனப்படும் தேசிய தலைநகர் பகுதியில் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. தலைநகர் பகுதியில் காற்று தர அளவீடு 450 என்ற மோசமான நிலையை எட்டியுள்ளது.
இந்தக் காற்று தர அளவீடு 50-க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே, காற்றின் தரம் சிறப்பாக உள்ளதற்கு அடையாளம். டெல்லியில் இவ்வளவு மோசமாக காற்றின் மாசு உள்ளதால் தலைநகர் வாசிகள் மூச்சுமுட்டுகின்றனர்.
இதையும் படிங்க...தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, விற்கத் தடை: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி