ETV Bharat / bharat

ராகுல் காந்திக்கு தன் சொத்து முழுவதையும் எழுதிவைத்த மூதாட்டி - காரணம் என்ன தெரியுமா? - पुष्पा ने राहुल के नाम की संपत्ति

டேராடூனைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தன் சொத்துகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொடுப்பதாக உயில் எழுதி வைத்து, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Apr 4, 2022, 7:06 PM IST

டேராடூன் (உத்தரகாண்ட்) : உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள தாலன்வாலா பகுதியில் வசிப்பவர், மூதாட்டி புஷ்பா முன்ஜியால். இவரிடம் உள்ள சொத்துகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொடுப்பதாக உயில் எழுதிவைத்துவிட்டு, அதை டேராடூன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் தெரிவித்த அம்மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் லால்சந்த் சர்மா, மூதாட்டி புஷ்பா, ராகுல் காந்தியின் பெயரில் எழுதி வைத்த சொத்துகான ஆவணங்களை முன்னாள் மாநிலத் தலைவர் பிரீதம் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய மூதாட்டி புஷ்பா, "இந்திய நாட்டிற்காக காந்தி குடும்பம் உயர்ந்த பல தியாகங்களை இன்று வரை செய்து வருகிறது. இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் காந்தி குடும்பம் உயிர்த் தியாகம் செய்துள்ளது. அதே சமயம் ராகுல் காந்தியின் எண்ணங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன்" என்றார்.

மூதாட்டி புஷ்பா தன் சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் அளித்து, ராகுல் காந்தி பெயரில் உயிலை சமர்ப்பித்து, தனக்குப் பிறகு, தன் சொத்துகளை ராகுல் காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். மூதாட்டி புஷ்பா முன்ஜியாவிடம் வங்கியில் ரூ.50 லட்சம் பணம், 10 சவரன் தங்கம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் உயர்ந்த எண்ணங்களால் ஈர்க்கப்பட்ட மூதாட்டி புஷ்பா, அவரைத் தன் சொத்தின் வாரிசாக மாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: தெலங்கானா மாநிலத்தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்... தலைவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.