உள்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் உள்பட 28 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலான திட்டம்
ஆயுத உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒப்புதல் வழங்கப்பட்டதில் இந்திய விமானப்படைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்து உருவாக்கிய ஏஇடபிள்யு&சிஎஸ் (Airborne Early Warning and Control Systems) என்ற விமானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.