கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சரும், அம்மாநில கரோனா பணிக்குழுவின் தலைவராகவும் உள்ள சி.என்.அஸ்வதா நாராயணா, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களும் குறைந்தபட்சம் முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை பெற்ற பிறகே கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கரோனா பரவலுக்கு மத்தியிலும் கற்பித்தல், கற்றல் செயல்முறைகள் நிறுத்தப்படவில்லை என்றும், டிஜிட்டல் முறையில் அவை தொடர்வதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆன்லைன் வகுப்புகளுக்கு வருகை கட்டாயம் என்பதால் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து அவசர முடிவு எடுக்கத் தேவையில்லை. கர்நாடக மாநில அரசு டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கையாக உள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் இந்த உருமாறிய வைரஸுக்கும் எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்கள், அனைத்துக் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பணத்துக்காக 14 வயது சிறுமியை தந்தையே விற்ற அவலம்!