மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேயின் வாக்ஹோலி பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில், செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எந்திரம் இல்லாமல் பணிபுரிந்த இவர்களில், இருவர் விசவாயு தாக்கி உயிரிழந்தனர். ஒருவரை அதில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் தீயணைப்புத்துறையினர் உடன் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மாயான ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பாதாளச் சாக்கடை அல்லது செப்டிக் டேங்க் பணியின் போது உயிரிழப்பு, வழங்கப்படும் இழப்பீடு உயர்வு