ஹதராபாத் (தெலங்கானா): தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கம்மாரெட்டி மாவட்டத்தில் நேற்று லாரி மீது மினி ட்ரக் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலியாகினர். இதனையடுத்து 19 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹசன்பள்ளி அருகே 25 பேர் கொண்ட டாட்டா மினி ட்ரக் ஒன்று எல்லாரெட்டியிலிருந்து வந்து கொண்டிருந்தது. வண்டியை ஓட்டுநர் அதிவேகத்தில் இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த ட்ரக் எதிரே வந்த லாரி மீது பலமாக மோதியது. இரு வண்டிகளின் ஓட்டுநர்களான சைலு மற்றும் லச்சாவா ஆகியோர் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தோர் மீட்கப்பட்டு அருகிலிருந்த எல்லாரெட்டி, நிசாம்பாத் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் எல்லயா மற்றும் போச்சயா ஆகியோர் உயிரிழந்தனர். இதனையடுத்து விபத்தில் நேற்று (மே 8) 7 பேர் பலியாகிய நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...