பாட்னா: பிகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ராவில், கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அன்று சிலர் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். பின்னர் வீடு திரும்பிய அவர்கள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், சிகிச்சைப் பலனின்றி நேற்று வரை 20 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட கும்பலைக் கண்டறிவதற்காக, சரண் மாவட்ட நிர்வாகம் சார்பில், தனிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை அதிரித்து வருவதாகவும், இதனால் மதுப்பிரியர்கள் கள்ளச்சாராயத்தை நாடி செல்வதால் இத்தகைய அசம்பாவிதம் நிகழ்வதாகவும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி சிறுவனுக்கு போதை பொருளை கட்டாயப்படுத்தி கொடுத்த இளைஞர்கள்; வைரல் வீடியோ