ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 17%இல் இருந்து 28%ஆக உயர்த்தி வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
11% அகவிலைப்படி உயர்வு
பிரதமர் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூலை 14) நடைபெற்றது. இதில் கரோனா பாதிப்புக் காரணமாக, அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை 17%இல் இருந்து 28%ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டதாக, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு ஓய்வுதியதாரர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த நடைமுறை ஜூலை 1இல் இருந்தே கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.
இந்திய வணிக கப்பல்களுக்கு மானியம்
அதுமட்டுமல்லாது, 'வடகிழக்கு நாட்டுப்புற மருத்துவக்கழகத்தின் பெயரை (NEIFM), வடகிழக்கு ஆயுர்வேத மற்றும் நாட்டுப்புற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (NEIAFMR) எனப் பெயர் மாற்றம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வணிக நோக்கமுடைய இந்திய கப்பல்களுக்கு உலகளாவிலான ஒப்பந்தங்கள் எடுக்கும் வண்ணம், மானியங்கள் தர ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன்மூலம் வணிகக் கப்பல்களின் சேவை அதிகரிக்கும்' என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேவையில்லை, மாநில அளவில் தேர்வு - ஏ.கே. ராஜன் குழு அறிக்கையில் தகவல்