ETV Bharat / bharat

'நான் இன்னும் சாகல' - உடற்கூராய்வு சமயத்தில் எழுந்த கர்நாடகவாசி! - Mahalingapura-Rabakavi Road accident

பெங்களூரு: பாகல்கோட்டில் அரசு மருத்துவர் இறந்துவிட்டதாகக் கூறிய நபர், உடற்கூராய்வு சமயத்தில் கால் அசைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Bagalkote
கர்நாடகா
author img

By

Published : Mar 2, 2021, 5:18 PM IST

கர்நாடகாவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நபர், உடற்கூராய்வு சமயத்தில் உயிர்ப்பெற்ற சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மஹலிங்கபுரா நகரைச் சேர்ந்த சங்கர், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதியன்று மஹலிங்கபுரா-ரபகவி சாலையில் பைக் விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவர், அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், காப்பாற்றுவது கடினம் எனக் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சங்கரின் உறவினர்கள், அவரை மஹலிங்கபுரா அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, சங்கரின் உடல் உடற்கூராய்வு செய்வதற்காகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அச்சமயத்தில் அவரின் கால் அசைவதைப் பார்த்த ஊழியர்கள், குடும்பத்தினருக்கும், மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். உயிருடன் உள்ள நபரை, இறந்துவிட்டார் என அரசு மருத்துவர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காவலர் உடல் தகுதித் தேர்வு: தேர்ச்சிப்பெற்ற 15 திருநங்கைகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.