உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டம் நிகாசன் பகுதியில் ஒரு கிராமம் உள்ளது. இதன் அருகில் உள்ள ஒரு மரத்தில் இரண்டு சகோதரிகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். 14 மற்றும் 17 வயது சகோதரிகளின் இந்த நிலையைக் கண்ட சிறுமிகளின் குடும்பத்தினர் மட்டுமல்லாது, கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இதனால் அங்கு கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேநேரம், ‘மதியம் 3 மணியளவில் பைக்கில் வந்த மூன்று பேர் சிறுமிகளை கடத்திச் சென்றனர். மேலும் அவர்கள் (சிறுமிகள்) பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்” என சிறுமிகளின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து நிகாசன் பகுதி காவல்துறையினர் கூறுகையில், "மாவட்டத்தின் மூத்த காவலர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும், நிகாசன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விதிமுறைகளின்படி உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தன். இந்த அறிக்கையின் அடிப்படையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
-
लखीमपुर (उप्र) में दो बहनों की हत्या की घटना दिल दहलाने वाली है। परिजनों का कहना है कि उन लड़कियों का दिनदहाड़े अपहरण किया गया था।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
रोज अखबारों व टीवी में झूठे विज्ञापन देने से कानून व्यवस्था अच्छी नहीं हो जाती।आखिर उप्र में महिलाओं के खिलाफ जघन्य अपराध क्यों बढ़ते जा रहे हैं? pic.twitter.com/A1K3xvfeUI
">लखीमपुर (उप्र) में दो बहनों की हत्या की घटना दिल दहलाने वाली है। परिजनों का कहना है कि उन लड़कियों का दिनदहाड़े अपहरण किया गया था।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 14, 2022
रोज अखबारों व टीवी में झूठे विज्ञापन देने से कानून व्यवस्था अच्छी नहीं हो जाती।आखिर उप्र में महिलाओं के खिलाफ जघन्य अपराध क्यों बढ़ते जा रहे हैं? pic.twitter.com/A1K3xvfeUIलखीमपुर (उप्र) में दो बहनों की हत्या की घटना दिल दहलाने वाली है। परिजनों का कहना है कि उन लड़कियों का दिनदहाड़े अपहरण किया गया था।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 14, 2022
रोज अखबारों व टीवी में झूठे विज्ञापन देने से कानून व्यवस्था अच्छी नहीं हो जाती।आखिर उप्र में महिलाओं के खिलाफ जघन्य अपराध क्यों बढ़ते जा रहे हैं? pic.twitter.com/A1K3xvfeUI
அதேபோல் காவல் ஆய்வாளர் கூறுகையில் “சிறுமிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்படும் வரை அவர்களது குடும்பத்தினர் எந்த புகாரும் அளிக்கவில்லை. இறப்புக்கான காரணத்தை அறிய உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.
அவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், தற்கொலைக்கான வாய்ப்பையும் நாங்கள் நிராகரிக்க முடியாது” என்றார்.
மேலும் லக்னோ ஐஜி இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், "சிறுமிகள் அவர்களது துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். அவர்களின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை.
பிரேத பரிசோதனையை நிபுணர்கள் குழு சரியாக நடத்தும். சிறுமிகளின் குடும்பத்தினர் தங்கள் புகாரில் எங்களிடம் என்ன சொல்கிறார்களோ அதன் அடிப்படையில் நாங்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வோம்” என கூறினார்.
தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்,"யோகி (யோகி ஆதித்யநாத்) அரசில், பெண்கள் மற்றும் சிறுமிகளை தினமும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது மிகவும் வெட்கக்கேடானது. அரசாங்கம் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
निघासन पुलिस थाना क्षेत्र में 2 दलित बहनों को अगवा करने के बाद उनकी हत्या और उसके बाद पुलिस पर पिता का ये आरोप बेहद गंभीर है कि बिना पंचनामा और सहमति के उनका पोस्टमार्टम किया गया।
— Akhilesh Yadav (@yadavakhilesh) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
लखीमपुर में किसानों के बाद अब दलितों की हत्या ‘हाथरस की बेटी’ हत्याकांड की जघन्य पुनरावृत्ति है। pic.twitter.com/gFmea4bAUc
">निघासन पुलिस थाना क्षेत्र में 2 दलित बहनों को अगवा करने के बाद उनकी हत्या और उसके बाद पुलिस पर पिता का ये आरोप बेहद गंभीर है कि बिना पंचनामा और सहमति के उनका पोस्टमार्टम किया गया।
— Akhilesh Yadav (@yadavakhilesh) September 14, 2022
लखीमपुर में किसानों के बाद अब दलितों की हत्या ‘हाथरस की बेटी’ हत्याकांड की जघन्य पुनरावृत्ति है। pic.twitter.com/gFmea4bAUcनिघासन पुलिस थाना क्षेत्र में 2 दलित बहनों को अगवा करने के बाद उनकी हत्या और उसके बाद पुलिस पर पिता का ये आरोप बेहद गंभीर है कि बिना पंचनामा और सहमति के उनका पोस्टमार्टम किया गया।
— Akhilesh Yadav (@yadavakhilesh) September 14, 2022
लखीमपुर में किसानों के बाद अब दलितों की हत्या ‘हाथरस की बेटी’ हत्याकांड की जघन्य पुनरावृत्ति है। pic.twitter.com/gFmea4bAUc
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சிறுமிகளின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் விசாரணை காவலில் வைக்கப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேநேரம் மேலும் இச்சம்பவம் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற படவுன் சகோதரிகளின் மரணத்தை நினைவூட்டுகிறது என பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக்கூறி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!