டூல்கிட் தொடர்பான வழக்கில் பெங்களூருவை சேர்ந்த 22 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார். இருவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது கைது தொடர்பாக விளக்கம் கேட்டு டெல்லி பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் திஷா ரவி மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் நகலை கேட்டுள்ளது. மேலும், திஷாவை ரிமாண்ட் செய்வதற்கு முன் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக திஷா ரவியின் கைதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட முன்னணி கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை பதிவுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பலம் இழக்கும் காங்கிரஸ்? மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா