புதுடெல்லி: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்சினை, 12-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அவசர கால பயன்பாட்டுக்காக செலுத்த, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (DCGI) ஒப்புதல் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பாரத் பயோடெக் 2-18 வயதிற்குள்பட்டவர்களுக்களின் COVAXIN (BBV152) கான மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பிடம் (CDSCO) சமர்ப்பித்தது.
இந்தத் தரவுகள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நிபுணர்கள் குழு முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்ட பின், அவர்கள் நேர்மறையான பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Vaccination for children: ஜனவரி 3-ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி - பிரதமர்