ETV Bharat / bharat

110 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த டார்ஜீலிங் டீ விற்பனை நிறுத்தம் - டார்ஜிலிங் டீ

டார்ஜீலிங்கில் 110 ஆண்டுகளாக டார்ஜிலிங் டீயை விற்றுவந்த பிரபல ‘Glenary' உணவகம், திடீரென டீ விற்பனையை நிறுத்தியுள்ளது.

110 ஆண்டு பாரம்பரியமாக விற்கப்பட்ட டார்ஜீலிங் டீ விற்பனை நிறுத்தம்...!

author img

By

Published : Sep 24, 2022, 5:48 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் டார்ஜீலிங்கில் 110 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ’Glenary' உணவகத்தில் டார்ஜீலிங் டீ விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்ட ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட போனஸ் தொகையை வழங்கும் வரை விற்பனை தொடங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவகம் தரப்பில், "எங்களது உணவரம் மற்றும் கிளை கடைகளில் டார்ஜிலிங் டீ விற்கப்படாது. தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். அப்படி வழங்கப்படவில்லை என்றால் டீ விற்பனை நடக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மற்ற கடைகளிலும் டீ விற்பனை நிறுத்தப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுவருகிறது. டார்ஜிலிங் தேயிலைத் தோட்ட ஊழியர்கள் தங்களின் 20 சதவீத போனஸ் தொகையை ஒரே தவணையில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் உரிமையாளர்கள் 2 தவணைகளாக கொடுக்க மட்டுமே ஒப்புகொண்டனர். இதனால் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போது அவர்களுக்கு ஆதரவாக டீ கடை மற்றும் உணவக உரிமையாளர்களும் குரல் கொடுத்துவருகின்றனர்.

இதையும் படிங்க: பகல் இரவு நாளில் பிரமிப்பூட்டிய பத்மநாபசாமி கோயில் - கோபுரத்தின் வாதில்களில் அதிசய ஒளி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.