டெல்லி: மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “பட்டியலின மக்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டு இடஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது, அவர்கள் பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழப்பார்கள்” என்றும் கூறினார்.
எனினும் சீக்கிய, புத்த மதத்தை ஏற்றுகொண்ட பட்டியலின மக்கள் தனித்தொகுதியில் போட்டியிடலாம். இதனை மற்றொரு பாஜக உறுப்பினர் கூறினார். மேலும் இந்தச் சட்டத்தில் எவ்வித திருத்தமும் கொண்டுவரும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, 2015 ஆம் ஆண்டில், ஒரு தீர்ப்பில் உயர் நீதிமன்றம் ஒரு நபர் இந்துவாக இருந்து ஒரு கிறிஸ்தவராக மாறியவுடன், இந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் நின்றுவிடுகின்றன. எனவே அவருக்கு இனி இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் அளிக்க வேண்டிய அவசியமில்லை, இதற்காக காரணம் அவர் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல” என்று தீர்ப்பளித்திருந்தது என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'இடஒதுக்கீட்டில் பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் தேர்தலில் வாய்ப்பு அளிக்கக்கூடாது'