ETV Bharat / bharat

புத்த மதத்தை அழிக்க சீனா முயற்சி: தலாய்லாமா பகீர் குற்றச்சாட்டு! - சீனா

புத்த மதத்தை விஷமாக கருதும் சீன அரசு பல்வேறு இடங்களில் உள்ள புத்த மடங்களை அழித்ததாகவும், இருப்பினும் புத்த மதத்தின் மீதான நம்பிக்கை சீன மக்களிடம் இருந்து குறையவில்லை என்று திபத்திய புத்த மத குரு தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

தலாய்லாமா
தலாய்லாமா
author img

By

Published : Dec 31, 2022, 8:01 PM IST

கயா: பீகார் மாநிலம் புத்தகயாவில் "புத்த மஹோத்சவம்" போதனை நிகழ்ச்சி கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாள் நிகழ்ச்சியில் திபத்திய புத்த மதகுரு தலாய்லாமா கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்.

சொற்பொழிவின் மூன்றாவது மற்றும் கடைசி நாளில் பேசிய புத்த மதகுரு தலாய்லாமா, சீன மக்களின் மனதில் இருந்து புத்த மதத்தை வேரோடு அழிக்க சீன அரசு போராடி வருவதாக கூறினார். சீன அரசால் புத்த மதம் பாதிக்கப்பட்டதாகவும், விஷம் போல் புத்த மதத்தை கருதிய சீன அரசு பல்வேறு புத்த மடங்களை அழித்ததாக தெரிவித்தார்.

புத்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் சீனாவில் அதிகம் இருப்பதாகவும், அதனால் சீன அரசால் பவுத்தத்தை அழிக்க முடியவில்லை என்றார். என் மீதும், புத்த மதத்தின் மீதும் நம்பிக்கை கொள்பவர்கள் நான் அளிக்கும் புத்த சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறிய தலாய்லாமா அவர்கள் சீனராகவோ, திபத்தியராகவோ, மங்கோலியராகவோ இருந்தாலும் சரி என்று தெரிவித்தார்.

சீனாவில் அதிகளவிலான புத்த மடங்கள் இன்றளவும் இருப்பதாகவும், மக்களின் மனதில் புத்தரும், புத்த மதமும் இருப்பதாக அவர் கூறினார். இதனால் சீன அரசு புத்த மதத்தை வேரோடு அழிக்க முயன்றதா குறிப்பிட்டார்.

புத்த சித்தாந்தங்களை உங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் பயிற்சி செய்யுமாறு கூறிய தலாய்லாமா, திபெத்திய பாரம்பரியத்தில் சாக்கியர்கள் புத்த மத சித்தாந்தங்களை பின்பற்றியதாக கூறினார். தலாய்லாமாவின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அருணாசல பிரதேச முதலமைச்சர் பெம்ம கந்து கலந்து கொண்டார். மூன்று நாட்கள் நடந்து சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஐரோப்பிய நாடுகள் உள்பட ஏறத்தாழ 60 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனைவியின் தங்க நகையில் கணவருக்கு உரிமையில்லை - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.