மேஷம்
இன்று நீங்கள், அமானுஷ்யமான விஷயங்களில் மனதை ஈடுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த விஷயங்கள் தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படித்து அறிந்து கொள்ள விரும்புவீர்கள். அதில் உள்ளவற்றைப் பற்றி விரிவாகப் பேசுவீர்கள். இந்த அறிவை, நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
ரிஷபம்
இன்று, உங்களுக்குத் தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்துவந்த ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்களது வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவரைக் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது. அமைதியாக செயல்படவும். உங்களது வளமையான எதிர்காலத்தை பாதிக்காத வண்ணம் எதிர்வினை ஆற்றவும்.
மிதுனம்
இன்றைய தினத்தில், உயர் அலுவலர்கள் உங்களுக்குப் புதிய பொறுப்புகளை வழங்குவார்கள். பகல் நேரத்தில் வேலை அதிகம் இருந்தாலும், மாலையில், இன்றைய உங்களது திறமையான பணியின் காரணமாக பெற்ற, வெற்றியைக் கொண்டாடும் வாய்ப்பு உள்ளது. ஏலம் தொடர்பான விஷயங்களில் தற்போது முடிவெடுக்காமல் சிறிது ஒத்திப் போடுவது நல்லது.
கடகம்
இன்றைய தினத்தில், நீங்கள் தயக்கம் ஏதும் இல்லாமல் செயல்படுவீர்கள். உங்களுக்கு இருக்கும் எதிர்மறையான எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் விட்டு விட்டு, பொறுப்புகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும். பாதிப்புகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், உங்கள் பணியைத் தொடரவும்.
சிம்மம்
இன்று முழுவதும், பணியிடத்திலேயே இருப்பீர்கள். பெரிய நிறுவனங்களில் பணி செய்பவர்கள், உயர் அலுவலர்களின், அதிக அளவிலான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பணிகளை மேற்கொள்வார்கள். இல்லத்தரசிகளுக்கு, தினசரி பணிகளைத் தவிர, வேறுவிதமான வேலைகளையும் சமாளிக்க வேண்டிய நிலை இருக்கும். இது ஒரு முக்கியமான நாளாக இருக்கும்.
கன்னி
இன்று நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பீர்கள். தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் நேரத்தைத் திறமையாக நிர்வகித்து, பாடங்களைக் கற்று முடிப்பார்கள். சொத்துகளில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த நாளாக இருக்கும்.
துலாம்
இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, மக்கள் கூறும் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். அதைப் பற்றி எதுவும் குறை கூற மாட்டீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்களது பட்டும்படாத அணுகுமுறையின் மூலம், உங்களது கருத்துகளை நியாயப்படுத்தி எடுத்துக்கூற முடியும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் அறிவுப்பூர்வமாக சிரிக்காமல், மனப்பூர்வமாக சிந்திப்பீர்கள்; உணர்ச்சிகளை இன்று கட்டுப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். அவ்வாறு செய்ய முயற்சி செய்யவும் கூடாது. ஆனால், உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவும். ஏனென்றால் இதன் மூலம், பொது மக்கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டு.
தனுசு
இன்று ஒரே விதமான தினசரி பணிகளினால் உங்களுக்கு உற்சாகம் இல்லாமல் இருக்கும். கிரக நிலைகளும் மந்தமாக இருப்பதால், இன்று நீங்கள் குதூகலிக்கும் வகையிலான விஷயங்கள் நடக்கும் வாய்ப்பும் மிக குறைவு. அதனால் பொறுமையாக இருந்து, நாளை நன்றாக தொடங்கும் என்று நம்பிக்கை வைக்கவும்.
மகரம்
உங்களது அபரிவிதமான பேச்சாற்றல் காரணமாக, உங்களைச் சுற்றி இருப்பவர்களை, நீங்கள் அமைதிப்படுத்துவீர்கள். எனினும் நீங்கள் இந்த திறமையை மேலும் வளர்த்துக்கொள்வது நல்லது. பிரச்னைகளின் ஆணி வேர் வரை, சென்று ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பீர்கள்.
கும்பம்
இன்று நீங்கள் புதை மணலில் சிக்கிக் கொண்டதைப் போலவும். எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லை என்பது போலவும் உணர்வீர்கள். எனினும், எவரின் ஆதரவும் இன்றி செயல்படும் தன்மையுடைய கும்பராசிக்காரர்கள், இதிலிருந்து மீண்டு விடுவார்கள். உங்களுடைய இந்த உறுதியான மனப்பான்மை, உங்களை இந்த விஷயத்தில் இருந்து காப்பாற்றி கரை சேர்க்கும்.
மீனம்
உங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஆர்வம் எப்போதும் இருக்கும். அதற்கான காரணத்தை நீங்கள் தேடிக் கொண்டு இருப்பீர்கள். அதனால் இன்று நீங்கள் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டால், அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தினசரி பணியிலிருந்து சிறந்து விலகி, புத்துணர்ச்சி பெற இது மிகவும் தேவையான விஷயமாகும்.
இதையும் படிங்க: "வெளியானது பீஸ்ட் செகன்ட் லுக்" விஜய் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு