மேஷம்
இன்று நீங்கள், அழகின் பால் ஈர்க்கப்படுவீர்கள். அழகுப் பொருட்கள் தொடர்பான புதிய தொழில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க நீங்கள் விரும்பலாம். ஆனால் முடிவெடுப்பது சிறிது கடினமாக இருக்கும். சாத்தியமான வாய்ப்புகளை ஆராய்ந்து, முடிவுகளை மேற்கொள்ளவும்.
ரிஷபம்
இன்றைய தினம், நீங்கள் நல்ல முறையில் உங்களுக்கான நேரத்தை செலவழிப்பீர்கள். மற்ற நாட்களைப் போல் அல்லாமல், இன்று நீங்கள் அமைதியாக இருந்து புத்துணர்வை பெறவும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் விருந்து அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். ஏதேனும் ஒரு, வித்தியாசமான சுவை கொண்ட, உணவை ருசித்து பார்க்கும் ஆர்வம் இருக்கும்.
மிதுனம்
இன்று முழுவதும், நீங்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பீர்கள். நேர்மறையான கண்ணோட்டத்தை கொண்டிருப்பீர்கள். இது உங்கள் வெற்றிக்கு உதவியாக இருக்கும். இன்று உங்கள் விருப்பப்படி செயல்பட்டு, மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்வீர்கள். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், அதற்கு பலன் கிடைப்பதோடு நிம்மதியாகவும் உணர்வீர்கள்.
கடகம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால், உங்கள் முயற்சி பலனளிக்காமல் இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு அல்லது சச்சரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பக்கத்தில் இருப்பவர்கள் உடன் கவனமாக பழகவும். சூழ்நிலைகளை புன்னகையுடன் எதிர்கொள்ளவும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். பணியிடத்தில் நீங்கள் முக்கியமான முடிவுகளை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் வேலை சுமுகமாக நடைபெறுவதோடு, உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும்.
கன்னி
தனிப்பட்ட வாழ்க்கையில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் காரணமாக தொழில் சிறிது பாதிக்கப்படலாம். சவால்களை சந்தித்து அதனை தீர்க்க முயற்சி மேற்கொள்ளவும். உணர்வுகளுக்கு அடிமையாகாமல், முடிவுகளை உறுதியாக எடுக்கவும். குறிப்பாக மாலை நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
உங்கள் மனதில் ஒளிந்திருக்கும் கலைஞர் இன்று வெளிப்படுவார். உங்கள் கற்பனை திறன்களையும் நீங்கள் வெளிக்காட்டுவீர்கள். இன்று, நீங்கள் ஆர்வமாக உள்ள விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். ஆர்வமாக உள்ள துறையில், நீங்கள் மேம்படுவீர்கள். இன்று உங்களுக்கு ஆதாயமாக உள்ள சட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக இன்றைய தினம் ஒரு நல்ல வெற்றிகரமான நாளாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். கூடுதல் பணிச்சுமை மற்றும் பொறுப்பு காரணமாக சோர்வாக உணர்வீர்கள். ஆனால் மாலையில், சிறிது ஓய்வு கிடைக்கும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது புத்துணர்வை கொடுக்கும்.
தனுசு
இன்றைய தினம் சச்சரவுகளும் எதிர்பார்ப்புகளும் அடங்கிய நாளாக இருக்கும். உங்கள் மீது தங்களது கருத்துக்களை திணிக்க விரும்பும் நபர்களிடமிருந்து சிறிது விலகி இருக்கவும். பிறர் கூறும் கருத்துக்களை பொறுமையாக கேட்டு, அதனை ஏற்றுக் கொண்டால், சுமுகமான வகையில் சச்சரவுகளை தீர்க்கலாம்.
மகரம்
இன்றைய தினத்தில், வேலைப்பளு காரணமாக நீங்கள், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சோர்வாகவும் உற்சாகம் இன்றியும் உணர்வீர்கள். இது போட்டி நிறைந்த உலகம் என்பதால், எச்சரிக்கையுடன் செயல்படவும். உங்களை வீழ்த்தும், வாய்ப்புகளுக்காக உங்களுக்கு போட்டியாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். எச்சரிக்கையுடன் திறமையாக செயல்பட்டு, அவர்களை வெற்றி காணவும்.
கும்பம்
மாணவர்களின் தேர்வு முடிவுகள் மிகவும் சாதகமாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நீங்கள் செயல்படுவீர்கள். கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, உங்களது புகழ் பாதிக்காத வண்ணம் செயல்படவும். மக்களை மனிதாபிமானத்துடனும் அன்புடனும் அணுகவும்.
மீனம்
ஈடுபாட்டுடன், இடைவிடாமல் கடுமையாக உழைப்பவர்களுக்கு, இன்று சிறந்த நாளாக இருக்கும். இன்று பணியில் புதுமையான வழிமுறைகளை பின்பற்றுவீர்கள். கடவுளின் ஆசியால் வெற்றி கிடைக்கும். அதனால் கடுமையாக உழைத்து, தோல்வியை கண்டு மனம் துவளாமல் இருக்கவும்.
இதையும் படிங்க: WEEKLY HOROSCOPE: ஜன.16-22, முயற்சிகள் பலனளிக்கும் வாரம்!
இதையும் படிங்க: New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!