ETV Bharat / bharat

Horoscope 2022: பிப்ரவரி 2 இன்றைய ராசிபலன் - உங்க ராசி எப்படி? - பிப்ரவரி 2 ராசிபலன்

HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றையப் பலன்களைக் காண்போம்.

FEBRUARY MONTH HOROSCOPE
FEBRUARY MONTH HOROSCOPE
author img

By

Published : Feb 2, 2022, 6:11 AM IST

மேஷம்

எதிர்காலத்தைப் பற்றிய முடிவெடுக்கும்போது, பொது அறிவுடன் சிந்தித்து அதைச் செயலாற்றுவது நன்மையைத் தரும். திட்டங்களைத் தீட்டவும், கணக்கீடுகளை உருவாக்கவும், ஜோதிட கணிப்பை அறிவுறுத்தலாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால், உங்கள் பொது அறிவின் அடிப்படையிலேயே இறுதி முடிவை எடுங்கள்.

ரிஷபம்

வாதங்களாலும், விவாதங்களுமே இன்றைய நாள் நிறைந்திருக்கும். இன்று பிற்பகலில் வணிக விவாதங்களை நண்பர்களுடன் மேற்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. இன்று மாலையில், உங்கள் மனத்திற்கு நெருக்கமனவர்களிடமிருந்து சிறப்பான கவனிப்பு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

மிதுனம்

இன்று, பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது கடுமையான பணியாக இருந்தாலும்கூட, உங்களால் அதை நிறைவேற்ற முடியும். அதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், நம்பிக்கை இழக்க வேண்டாம், உறுதியும் கடின உழைப்பும் பலனளிக்கும். உங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களையும், சுற்றியுள்ளவர்களையும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். உங்கள் காதல் துணையை ஷாப்பிங்குக்கு அழைத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கடகம்

இன்றைய நாள், நீங்கள் கடுமையாக நடந்துகொள்ள நேரிடலாம். பிற்பகலில் உங்கள் தொழில் கூட்டாளிகளுடன் நேரத்தைச் செலவிட நேரலாம், உங்கள் அதிகாரத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினால், முக்கியமான ஒரு ஒப்பந்தத்தை இன்று முடிக்க முடியும். இன்று வாழ்க்கைத் துணை, அன்பைப் பொழிந்து உங்களைத் திக்குமுக்காட வைப்பார்.

சிம்மம்

இன்று உங்கள் கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டாம். அதன் விளைவாக உங்களுக்கு ஆத்ம திருப்தி ஏற்படும். ஆனால் இணக்கமான அணுகுமுறையைக் கைவிட வேண்டாம். தொழில்முறை விவகாரங்களில் நிதர்சனமான, வர்த்தகரீதியான அணுகுமுறையைத் தொடர்வது நன்மையளிக்கும்.

கன்னி

இன்று ஏற்படும் சில சிக்கல்களால் நீங்கள் எரிச்சலடையக்கூடும். உங்களுடைய ஆளுமையை மேம்படுத்துவதற்கான ஒரு படிப்பை நீங்கள் தொடர்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நெருக்கமான உரையாடல், உடல்ரீதியான இனிய அனுபவத்திற்கு உங்களை இட்டுச் செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.

துலாம்

அரசு தொடர்பான வேலைகள் இன்று உங்களுக்கு நன்மையளிக்கும். உடன்பிறந்தவர்களுடன் உங்கள் உறவு நெருக்கமாகும், நெருங்கிய நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட முடியும்.

விருச்சிகம்

மூத்தவர்கள், நண்பர்கள், உறவினர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய இன்று முழு நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும். உணர்ச்சிப்பூர்வமான நீங்கள் அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்கள் கொள்கைகளையும் விட்டுக் கொடுப்பீர்கள். வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று மாலை நேரத்தில் திருமணத்திற்காக வரன் வரலாம்.

தனுசு

இன்று எதுவும் முழுமையாக, ஆக்கப்பூர்வமாகச் செய்ய முடியாமல் போனாலும், அது நாளைக்கான உறுதியான முன்னேற்பாடாக இருக்கும். பகுதி நேர பயிற்சியில் சேர்ந்து, உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்குள் புதைந்திருக்கும், நீங்களே அறியாத திறமையை வெளிக்கொணரலாம். உங்கள் ஆசைகளை உயிர்ப்புடன் வைத்தால் அவை வெற்றிபெறலாம்.

மகரம்

இன்று உங்கள் மனத்தில் காதல் எண்ணங்கள் அதிகமாகத் தோன்றும். நினைவுகளைப் பின்னோக்கி அசைபோட்டு, நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் கழித்த சில பொன்னான நேரத்தை எண்ணி நெகிழ்ந்துபோவீர்கள். உங்கள் பழைய நண்பர்களை அழைத்து, அந்தப் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். தொழில்ரீதியாகப் பார்த்தால், முக்கியமான லட்சியங்களை அடைவீர்கள். ஒட்டுமொத்தமாகச் சொன்னால், இன்றைய நாள் உங்களுக்குப் பொன்னான நாள்.

கும்பம்

உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் வாங்கிய பொருள்கள் பற்றி நினைவில் வைத்திருக்காமல், ஆசைகளைப் பூர்த்திசெய்ய பயன்பட்ட கிரடிட் கார்டுகளைத் திரட்டுவீர்கள். இருந்தாலும், இந்த அனுபவம், திட்டமிடுவது பற்றி உங்களைச் சிந்திக்கவும், ஒழுங்கமைக்கவும் தூண்டலாம். மற்றவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

மீனம்

இன்றைய நாள், உங்களுக்குத் தேவையற்ற கவலை இருக்காது. அதிக சகிப்புத்தன்மையும், தாராளமனத்துடன் இருப்பீர்கள் என்பதால் பிறரை மன்னிப்பீர்கள். இது மிகவும் நல்லது, ஆனால் பிறர் தேவைக்கு அதிகமாக உங்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இதையும் படிங்க: Budget 2022: மத்திய பட்ஜெட்டில் உள்ள 10 முக்கிய அம்சங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.