மேஷம்
இன்று நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களுடைய உற்சாகத்தை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது பலவற்றை திட்டமிடுவதைக் காட்டிலும் செய்வதற்கான ஒரு நேரம். இன்று உங்களால் மலைகளை சுமக்கவும் சமுத்திரத்தைக் கடக்கவும் கூட இயலும். நாளின் பிற்பகுதியில் நீங்கள் கொண்டாடி மகிழலாம்.
ரிஷபம்
இந்த நாள் முழுவதும் மூன்று உணர்ச்சிகள் ஆட்கொண்டிருக்கும்: அவை, சக்தி, களிப்பு, உற்சாகப் பிரவாகம். அத்தகைய உற்சாகம் எப்போதும் தொற்றிக் கொள்ளக் கூடியது. எனவே உங்கள் அன்புக்குரியவர்களும் அருகாமையில் உள்ளவர்களும் அதனால் இன்புறுவார்கள். நாள் செல்லச் செல்ல நற்பலனும் அதிகரிக்கும். நீங்கள் களைப்பாக உணர்ந்தால் வேலையிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு ஓய்வெடுதது புத்துணர்வு பெறவும்.
மிதுனம்
உங்களது தனிப்பட்ட வாழ்க்கை சில உயர்வுகளையும் தாழ்வுகளையும் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மாலையில் கவனமும் அக்கறையும் கட்டாயமான தேவைகளாக இருக்கும். பணம் தொடர்பான விஷயத்தில் நீங்கள் இடர் ஏற்று செயல்படக்கூடும். சிந்தனையை அதிகம் செலுத்தாமல் உங்கள் நம்பிக்கையைக் காத்து அகமகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும்.
கடகம்
உங்கள் அவசர மனோபாவம் உங்கள் செயல்பாட்டை பாதிக்கும். நாளின் பிற்பகுதியில், எதிர்மறை கண்ணோட்டங்களைத் தவிர்த்து நேர்மறை விஷயங்களை மட்டும் கவனிக்கவும். வெறும் சிந்தனை என்றில்லாமல் செயல்படுவதால் நற்பலன்கள் விளையும். மெல்லிசையில் உங்கள் இதயத்தையும் புத்தியையும் லயிக்கச் செய்யுங்கள்.
சிம்மம்
உங்கள் கடமைகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் நீங்கள் எச்சரிக்கையுடன் நீதி செய்ய வேண்டும். நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதற்கு உரிய சன்மானங்களைப் பெறுவீர்கள். உங்கள் நன்மை நாடும் தன்மையும் இயலுந்தன்மையும் உங்களை இன்று அமைதியாக வைத்திருக்கும்.
கன்னி
செல்வாக்கான பதவியை நீங்கள் எதிர்பார்க்கலாம். மாலை நேரத்தில் வின்டோ-ஷாப்பிங் செய்யக்கூடும். உங்களுடைய மதியம் வின்டோ ஷாப்பிங் மற்றும் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்குப் பரிசு வாங்குவது எனக் கழியும். உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது குடும்பத்தினருடன் நீண்ட கால இலக்குகளை திட்டமிடுவதில் உங்கள் மாலைப் பொழுது கழியும்.
துலாம்
இன்றைய நாள் ஒரு குடும்ப நாள் ஆகும். எவ்வளவு உண்மை பேசுகிறோமோ, அவ்வளவு நல்லது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்கள் இன்று உங்கள் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். கொண்டாட்டத்திற்கு உரித்தான சில நல்ல செய்தி கிடைக்கக் கூடும்.
விருச்சிகம்
பிரச்சினைகளை சரிசெய்வதில் நீங்கள் அநேகமாக உங்கள் திறமையை வெளிப்படுத்தக் கூடும். உங்கள் பணியிடத்தில் நீங்கள் செய்யும் வேலையின் மீது உங்களுக்கு மிகுந்த விருப்பம் ஏற்படும். நாளின் பிற்பகுதியில், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை எட்டுவீர்கள்.
தனுசு
உங்கள் எதிரிகளுக்கும் போட்டியாளர்களுக்கும் கவலைப்படக் கூடும். கடும் போட்டியில் கூட நீங்கள் வெற்றி பெறும் திறமை உங்களுக்கு உள்ளதால் நீங்கள் கொண்டாடுவதற்கான அற்புதமான வாய்ப்பு இது. மாலையில், சமூக சந்திப்புகளில் மகிழ்வதில் உங்கள் நெருக்கமானவர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிடுவீர்கள்.
மகரம்
இன்று புதிய பொருளை நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள் என்றால் கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். அவ்வாறு செய்வது நன்மை தருவதாக இருக்கும். நீங்கள் திட்டப்படி நடப்பதை உறுதியாக இருந்தீர்களானால், விளைவு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நன்மை அளிப்பதாக இல்லாமல் போகக்கூடும் என்பதால் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்
உங்கள் ஆசைகள் உங்களை அடக்கியாள்பவராக ஆக்கும். இன்று பேசக்கூடாததைப் பேசுவதற்கு வாய்ப்பு அதிகம். அதீத வற்புறுத்தலை நீங்கள் செய்தால், நாளை கவலைப்படுவதற்க வாய்ப்பு அதிகம். அதீதமான முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.
மீனம்
உங்களுக்கு விருப்பமானவர்களுடன் இன்றைய பொழுதைக் கழிப்பதற்கு ஆயத்தமாவீர்கள். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்தாலும் செய்யவில்லை என்றாலும், உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக உங்களது வசதியையும் சௌகரியத்தையும் விட்டுக் கொடுப்பீர்கள்.