மும்பை: மகாரஷ்டிரா மாநிலம் மும்பையின் டப்பாவாலாக்கள் சேவை 5 நாள்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து டப்பாவாலாக்கள் தரப்பில், "மும்பையில் அலுவலக பணியாளர்களுக்கு அவர்களது வீட்டிலிருந்து உணவை எடுத்துச் செல்லும் டப்பாவாலாக்கள் சேவை ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 17ஆம் வரை நிறுத்தப்படுகிறது.
தங்களது சொந்த ஊர்களுக்கு டப்பாவாலாக்கள் சென்றுள்ளனர். மும்பையில் வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏப்.17ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் சேவை தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிடா விருந்தில் விபரீதம் - தொண்டையில் சிக்கிய எலும்பால் உயிரிழப்பு