புதுச்சேரி: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு சுமார் 740 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
இது வலுவடைந்து, வடக்கு ஆந்திரா, ஒடிசா மாநிலம் இடையே வரும் 26ஆம் தேதி காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதையும் படிங்க:குடிமைப் பணித்தேர்வு முடிவு 2020: முதலிடம் பெற்ற பிகாரைச் சேர்ந்த சுபாம்குமார்