டெல்லி: அதி தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு, வடக்கு-மேற்கு திசையில் நகர்ந்து வரும் டாக்டே புயல் குஜராத்தில் போர்பந்தர் மற்றும் நாலியாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டடுள்ள அறிக்கையில், “கிழக்கு மத்திய, தெற்கு மத்திய அரபிக்கடலில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த தீவிர புயல் 'டாக்டே' கிழக்கு மத்திய, அதன் அருகலுள்ள தெற்கு மத்திய அரபிக்கடலில் மையம் கொண்டிருந்தது. பின்னர் அது வேகமாக நகர்ந்து வருகிறது.
தீவிர புயல் 'டாக்டே' மிக அதி தீவிர புயலாகவும் வலுவடைந்து வடக்கு, வடக்கு மேற்கு திசையில் நகர்ந்து மே 18ஆம் தேதி பிற்பகல் அல்லது மாலையில் குஜராத்தின் போர்பந்தர் மற்றும் நாலியாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது
இந்த அதிதீவிர புயலின் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள மலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.