ETV Bharat / bharat

டாக்டே புயல்: எங்கிருந்து எடுக்கப்பட்டது இந்தப் பெயர்... காரணம் தெரியுமா?

author img

By

Published : May 15, 2021, 10:34 PM IST

அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு 'டாக்டே' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பர்மிய மொழியில் 'சிறிய வகைப் பல்லி' என்று பொருள். புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கப்படுகிறது? புயல்களுக்கு எப்போது பெயர் வைக்கும் பழக்கம் தோன்றியது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு...

Cyclone Tauktae gets its name from a gecko
டாக்டே புயல்: எங்கிருந்து எடுக்கப்பட்டது இந்தப் பெயர்?

ஹைதராபாத்: இந்திய வானியல் ஆய்வுத் துறை கடந்த ஆண்டு புயல்களுக்கான 169 பெயர்களை வெளியிட்டது. அதில், 'டாக்டே' நான்காவது இடத்தில் இருந்தது. 'டாக்டே' என்ற பெயரை மியான்மர் கொடுத்தது. இதற்கு பர்மிய மொழியில் 'கெக்கோஸ்' எனப்படும் சிறிய பல்லி என்று பொருள். கெக்கோஸ் பெரிய சத்தம் எழுப்பக்கூடியது, அதனை இருளில் மட்டுமே பார்க்கமுடியும். உலகில் 1,500க்கும் மேற்பட்ட கெக்கோஸ் இனங்கள் உள்ளன. இந்த கெக்கோஸ்களின் சத்தம் பெரும்பாலும் பறவையை ஒத்ததுபோல் இருக்கும். தனது இணையை கவர்வதற்காக இந்த ஒலியை அவைகள் எழுப்பும்.

எல்லா கெக்கோஸுக்கும் கண் இமைகள் இருக்காது. கண் இமைகள் இல்லாதவைகளுக்கு கார்னியா இருக்கும். இவற்றின் கண்பார்வை மனிதர்களைவிட 350 மடங்கு அதிகம். இரவிலும் நல்ல பார்வைத் திறனைக் கொண்ட இவைகள், மனிதர்களைவிட வண்ணங்களைத் தெளிவாக காணமுடியும்.

புயல்களுக்கு ஏன் பெயரிடப்படுகின்றன?

வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளைத் தாக்கும் புயல்களுக்கு பெயரிட விரும்பின. அதன்படி, ஒவ்வொரு நாடும் தங்களுக்கு விருப்பமான பெயர் பட்டியலைத் தயாரித்தன. இந்த நாடுகள் உறுப்பினராக உள்ள உலக வானிலை அமைப்பு, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் இணைந்து அந்தப் பெயர் பட்டியல்களில் இருந்து ஒரு இறுதிப் பட்டியலைத் தயாரித்தன.

புயல்களுக்கான பெயர் பட்டியல் முதன்முதலில் 2004ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. அப்போது, அந்தப் பெயர் பட்டியலில் 8 நாடுகள் பரிந்துரை செய்த 64 பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அந்தப் பட்டியலில் கடைசிப் பெயராக ஆம்பன் இருந்தது. 2018ஆம் ஆண்டு மேலும் ஐந்து நாடுகள் உலக வானிலை அமைப்பு, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தில் இணைந்தன. பின்னர், அவைகள் பரிந்துரைத்த பெயர்களும் சேர்க்கப்பட்டு புதியப் பட்டியல் வெளியிடப்பட்டது.

புயல்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக புயல்களைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, பொதுமக்கள், ஊடகங்கள், பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியவை எளிதில் புரிந்து கொள்வதற்காக புயல்களுக்கு பெயர்கள் வைக்கப்படுகின்றன. இது புயல் பாதிக்கும் பகுதிகளில் தேவையற்ற குழப்பங்களைக் களைய உதவுகிறது. புயல்களுக்குப் பெயர்கள் வைக்கும் பழக்கம் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் தோன்றியது.

இதையும் படிங்க: அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும் டாக்டே புயல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.