CWG 2022: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணி! - ஜெமினா
காமன்வெல்த் போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணி ள்ளிப்பதக்கம் வென்றது.

பர்மிங்ஹாம்: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று 22வது காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கணை பெத் மூனி 61 ரன்கள் எடுத்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார்.
தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மாவும் (11). ஸ்மிர்தி மந்தனாவும் (6) சிறப்பான தொடக்கத்தை கொடுக்கத் தவறினர். இதனையடுத்து வந்த ஜெமினா - ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

ஆனால் அவர்களால் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. முக்கியமாக ஜெமினா 33 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 63 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து வந்தவர்களும், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இதனால் இந்திய அணி 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. தோல்வியைத் தழுவிய இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இதையும் படிங்க: காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி - இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்