தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து துபாய் செல்வதற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற முகமது (37) என்பவர் வந்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எக்ஸ்-பிஐஎஸ் மெஷின் வழியாக வரும்படி, சுங்கத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ்ரே பரிசோதனையின்போது, அவரது பையில் சந்தேகத்திற்கிடமான படத்தை காவல் உதவி ஆய்வாளர் அஜித் குமார் பார்த்துள்ளார்.
இதையடுத்து, அந்தப் பையைத் திறந்து சோதித்ததில், ஸ்வீட் பாக்ஸில் வெளிநாட்டுப் பணம் மறைத்துவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1.03 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறுகின்றனர். பணத்தைப் பறிமுதல்செய்த சுங்கத் துறையினர், அந்நபரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்தில் 280 கிலோ ரேசன் அரிசி கடத்தல்!