ETV Bharat / bharat

புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு - நள்ளிரவு முதல் அமல்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த உத்தரவு அமலுக்குவரும் நிலையில், வழக்கம்போல் பொது போக்குவரத்து இயங்க எவ்விதத் தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

curfew on weekends in puducherry
curfew on weekends in puducherry
author img

By

Published : Apr 23, 2021, 5:26 PM IST

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. அந்தவரிசையில், ஏப்ரல் 23 ஆம் தேதி(இன்று) இரவு முதல் வரும் 26ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறை வார இறுதி நாட்களில் அமலுக்கு வருகிறது.

அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கின் போது ஹோட்டல்கள், மளிகைக் கடைகள், பழம் மற்றும் காய்கறி கடைகள், பால் பூத், பால் பொருட்கள் விற்பனையகம், கறி மற்றும் மீன் கடைகள், மருந்தகங்கள், செய்தித்தாள் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், ஆம்புலன்ஸ், சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து (பஸ், ஆட்டோ, டாக்சி), விவசாயம் சார்ந்த பொருட்கள் போக்குவரத்து, வீட்டு விலங்குகளுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை கடை, விவசாயம் சார்ந்த பணிகள், பெட்ரோல் பங்க், வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகம், ஏடிஎம், கேபிள் சர்வீஸ், ஐ.டி., குடிநீர் விநியோகம், மின்விநியோகம், தொழிற்சாலைகள், வீடுகளுக்கு உணவு டெலிவரி உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

ஊரடங்கின்போது அரசு பணி உள்பட அத்தியாவசியப் பணியில் இருப்போர் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள், பயணிகள் டிக்கெட்டுகளை வைத்திருக்க வேண்டும். வரும் 26ஆம் தேதி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் ஐந்து நாட்களும், கடைகள் பகல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.

இதன் மூலம் அத்தியாவசியத் தேவைக்கு பாதிப்பு ஏற்படாது. ஹோட்டல்கள், டீக்கடைகள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். திருமணங்களில் 100 நபர்களும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். வார இறுதி நாட்கள் ஊரடங்கிலும், இதே நடைமுறை தொடரும்.

மதம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள், ஒன்று கூடும் நிகழ்வுகள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மதம் சார்ந்த இடங்களில் வழக்கமான பூஜைகளை கரோனா விதிகளுக்கு உட்பட்டு நடத்தலாம் என, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.