சேலம் விமான நிலையம் அருகே விண்வெளி பராமரிப்பு பூங்காவை மேம்படுத்த க்ரவுன் குரூப் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழ்நாடு ராணுவத் தளவாடத்தின் ஒரு அங்கமாக இந்த விண்வெளி பராமரிப்பு பூங்கா அமையவுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் எம்ஆர்ஓ (ராணுவ விமானங்கள், உபகரணங்களின் பராமரிப்பு, பழுது பார்க்கும் வசதி கூடம்) அமையவுள்ளது. இந்த விண்வெளி பூங்காவில் ட்ரோன் சோதனை நிலையமும் அமைக்கப்படவுள்ளது.
விமானிகளுக்கு முதற்கட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை வழங்க பயிற்சி நிலையம் அமைக்கவும் புத்துணர்ச்சிப் பயிற்சிக்கூடம் நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.