மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், கேரளாவிற்கு கடந்த 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரை பல்வேறு வனத்துறை திட்டங்களுக்காக ஒதுக்கிய 71.33 கோடி ரூபாய் நிதியில், 32.74 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவலில் வெளியாகியுள்ளது.
சமீப காலங்களாக மனித- வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், நிதிகளைத் திறம்படப் பயன்படுத்துவதில் வனத்துறை தொடர்ந்து அக்கறை காட்டவில்லை என்பது தகவல் அறியும் சட்டம் முதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு, விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கவும் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், விலங்குகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மக்கள் மத்தியில் வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், 50 விழுக்காடு மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: தன்னை வெட்டவந்தவர்களிடமிருந்து அரிவாளைப் பிடுங்கி திருப்பி வெட்டிய அதிமுக பிரமுகர்!