ETV Bharat / bharat

ஆந்திராவில் தடையை மீறி களைகட்டிய சேவல் சண்டை - ரூ.50 கோடி வரை பந்தயம்! - கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறல்

ஆந்திர பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தடையை மீறி நடந்த சேவல் சண்டையில் பல கோடி ரூபாய் பணம் கைமாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் சேவல் சண்டையை காண மக்கள் அதிகளவில் கூடியதால் கரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில்  சேவல் சண்டை
ஆந்திராவில் சேவல் சண்டை
author img

By

Published : Jan 16, 2022, 1:27 PM IST

அமராவதி (ஆந்திர பிரதேசம்) : தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல், ஆந்திராவில் சங்கராந்தி விழா கொண்டாடப்படும். இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறும். இந்தப்போட்டிக்கு அரசு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தடையை மீறி சேவல் சண்டை ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைபெறும்.

அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் இதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பார்கள். சேவல் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டு கோடிகளில் பந்தயம் கட்டி போட்டியை நடத்துவார்கள். இதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து போட்டியில் கலந்து கொள்ள வருவார்கள். சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டு, இரவிலும் போட்டியை நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அந்தவகையில் இந்தாண்டும் தடையை மீறி சங்கராந்தி விழாவையொட்டி மூன்று நாள்கள் சேவல் சண்டை நடைபெற்றது.

15 பேர் கைது

கிருஷ்ணா மாவட்டம் சந்திரலபாடு பகுதியில் இரண்டு இடங்களிலும், நந்திகமவில் இரண்டு இடங்களிலும், பரிதாளம், அம்பாபுரத்தில் தலா ஒரு இடங்களில் சேவல் சண்டை வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குச்சிப்புடியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிரகாசம் மாவட்டத்தின் தம்மடப்பள்ளி கிராமத்தில் சேவல் சண்டை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்று காவல்துறையினர் 15 பேரை கைது செய்து ரூ.18,000 ரொக்கப் பணம், மற்றும் மூன்று சேவல்களை பறிமுதல் செய்தனர்.

இன்னோவா கார் பரிசு

கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் போகி பண்டிகையன்று சேவல் சண்டை தொடங்கியது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் முதல் நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டிக்கு ரூ.50 லட்சம் வரை பந்தயம் கட்டப்பட்டது. 60 போட்டிகளில் அதிக வெற்றி பெறும் மாவட்டத்திற்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பந்தயத்தில் வெற்றி பெறும் சேவல் உரிமையாளருக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

எம்எல்ஏ வருகை

சேவல் சண்டையைப் பார்வையிட மும்மிடிவரம் ஆளுங்கட்சி எம்எல்ஏ பொன்னாட வெங்கடசதீஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ தாட்லா புச்சிபாபு ஆகியோர் பள்ளங்குரு பகுதிக்கு சென்றிருந்தனர்.

மேலும், சேவல் சண்டை வளையத்தில் ட்ரோன் கேமரா பறக்கவிட்டும், டிஜிட்டல் திரை அமைத்தும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: பாஜகவில் இணைகிறார் முலாயம் சிங் மருமகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.