ETV Bharat / bharat

சிபிஐ, திரிணாமுல், என்சிபி தேசிய கட்சி அந்தஸ்து இழப்பு.. ஆம் ஆத்மிக்கு கிடைத்த அங்கீகாரம்! - Trinamool Congress

ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

AAP
ஆம்ஆத்மி
author img

By

Published : Apr 11, 2023, 1:34 PM IST

டெல்லி: தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு அரசியல் கட்சி நான்கு மாநிலங்களில், 6 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தால், அக்கட்சிக்கு 'தேசியக் கட்சி' என்ற அங்கீகாரம் வழங்கப்படும். தேசிய அங்கீகாரம் கிடைத்தால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியும். இந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில் படிப்படியாக வளர்ச்சியடைந்து, டெல்லி, பஞ்சாபில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் ஆம்ஆத்மி கட்சி, அண்மையில் நடந்து முடிந்த கோவா, குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் 6 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான் மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு தேசிய கட்சி அங்கீகாரம் பெற ஆம்ஆத்மி முடிவு செய்தது. அதன்படி, தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கக்கோரி, கடந்த வாரம் ஆம்ஆத்மி சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் ஆம்ஆத்மி கட்சியின் கோரிக்கை மீது முடிவெடுக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று(ஏப்.10) மாலை ஆம்ஆத்மிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேசிய கட்சி அங்கீகாரம் கிடைத்ததை ஆம்ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், "குறுகிய காலத்தில் ஆம்ஆத்மிக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் அதிசயத்துக்கு குறைவானது அல்ல. அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாட்டு மக்கள் எங்களுக்கு பெரிய பொறுப்பை வழங்கியுள்ளனர். இந்த பொறுப்பை சிறப்பாக கையாள எங்களை கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் தனது ட்விட்டர் பதிவில், "ஆம்ஆத்மி தொண்டர்கள், நிர்வாகிகளின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கனவுகள் நனவாகட்டும். ஆம்ஆத்மியின் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆம்ஆத்மி தேசிய கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், சில கட்சிகளின் தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மம்தா பானஜர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தேசியக் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அவை மாநில கட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. எதிர்வரும் தேர்தல்களில் போதிய அளவுக்கு வாக்கு விகிதத்தைப் பெற்றால் இந்த கட்சிகள் மீண்டும் தங்களது தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, மக்களவை தேர்தலில் மத்திய பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை பாதிக்கும் என்றும், மம்தா, சரத் பவார் உள்ளிட்டோர் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் என்பதால் தேசிய அங்கீகாரம் ரத்தானது அவர்களுக்கு பின்னடைவாக அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தாங்கள் ஏராளமான தடைகளைக் கடந்து வந்துள்ளதாகவும், இதனையும் கடந்து வருவோம் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி செளகத ராய் தெரிவித்துள்ளார்.

இப்போது, நாட்டில் பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகள் தேசிய கட்சிகளாக உள்ளன.

இதையும் படிங்க: ஆந்திர அரசுக்கு எதிராக ஈநாடு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.