கொல்கத்தா: ஒன்றிய அரசுக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான சச்சரவு நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிவருகிறது.
அதன் ஒருபகுதியாக இனிமேல், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் படம் கரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் அச்சிடப்பட வாய்ப்புள்ளது, ஏனெனில் மாநில அரசு தானாகவே தடுப்பூசிகளை வாங்கி பொதுமக்களுக்கு கொடுத்துவருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு தனது சொந்த பணத்தினால் தடுப்பூசிகளை வாங்குவதால், பிரதமருக்குப் பதிலாக முதலமைச்சரின் புகைப்படம் அச்சிடப்படும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "விளைவுகளை சந்திப்பீர்கள்" ட்விட்டருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இந்திய அரசு