நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி திட்டம் தற்போது 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு அமலில் உள்ளது. இந்நிலையில், 12-15 வயதுக்கு உள்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இந்த வாரம் தொடங்கும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய ஆலோசனை குழு இதற்கு பரிந்துரை செய்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
12-15 வயதினருக்கு பயாலஜிக்கல் இ Corbevax தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 180 கோடிக்கும் மேல் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 96 கோடியே 88 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 81 கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கோடியே 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மதுக்கடைகளை தாக்கிய முன்னாள் பெண் முதலமைச்சர்