நாட்டின் கோவிட்-19 சூழலை கருத்தில் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
பொதுதுறை நிறுவனமான எச்.ஏ.எல். பல்வேறு மாநிலங்களில் செயல்படும் அலுவலகங்களுக்கு விடுமுறை நாள்களை அறிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள நிறுவன ஊழியர்களுக்கு ஏப்ரல் 23-27 தேதியும், லக்னோவில் உள்ள ஊழியர்களுக்கு ஏப்ரல் 21-23 தேதியும், நாசிக் ஊழியர்களுக்கு 22-24 வரையிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பரவலை முறியடிக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தில் எந்த பிடித்தமும் இருக்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்திற்கான ஆக்ஸிஜன் உ.பிக்கு செல்கிறது - மம்தா குற்றச்சாட்டு