உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 40 லட்சத்தைக் கடந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா மாதிரி, உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ராய்ட்டர்ஸ் கூற்றுப்படி, "கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை கடந்த 166 நாள்களில் 20 லட்சம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, மெக்சிகோ ஆகிய நாடுகளில்தான் 50 விழுக்காடு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், பெரு, ஹங்கேரி, போஸ்னியா, செக் குடியரசு, ஜிப்ரால்டர் ஆகியவற்றில் அதிக இறப்பு விகிதங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக இந்தியா, பிரேசில் நாடுகளில் ஒவ்வொரு நாளும் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன. மயானங்களில் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் திணறிவந்தன. உலகளவில் மூன்று இறப்புகளில் ஒன்று இந்தியாவில் பதிவாகிறது என உலகம் முழுவதும் பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன" எனத் தெரியவருகிறது.
உலக சுகாதார அமைப்பு, கடந்த மாதம், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கை நிச்சயமாக அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையில் பல நாடுகளில் சரியான எண்ணிக்கை வெளியிடவில்லை என சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.81 கோடியைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கரோனா 3ஆம் அலையால் குழந்தைகளுக்குப் பாதிப்பு இருக்காது'