ETV Bharat / bharat

இந்தியாவில் 81 நாள்களுக்குப் பிறகு 60 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்த கரோனா எண்ணிக்கை! - corona cases in india

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,576 பேர்  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jun 20, 2021, 2:17 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 419 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 965ஆக உள்ளது.

மாநிலத்தில் நேற்று (ஜூன்.19) மட்டும் 1,576 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 713ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டு கோடியே 87 லட்சத்து 66 ஆயிரத்து ஒன்பதாக உள்ளது. தற்போது வரை ஏழு லட்சத்து 29 ஆயிரத்து 243 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இதுவரை, மொத்தம் 27 கோடியே 66 லட்சத்து 93 ஆயிரத்து 572 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.