காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் நான்கு முக்கிய நகரங்களின் இரவு நேர ஊரடங்கை பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பண்டிகை மாதமான நவம்பர் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் கரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கின. இதையடுத்து அம்மாநில அரசு அகமதாபாத், சூரத், வடோதரா, ராஜ்கோட் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்ககை அமல்படுத்தியது.
இந்த ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் நான்கு மாவட்டங்களிலும் இரவு நேர ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இதனால் இப்பகுதிகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 வரை இரவு ஊடரங்கு அடுத்த 15 நாள்களுக்கும் அமலில் இருக்கும். இது குறித்து மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், “மாநிலத்தில் கரோனா தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது. கரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 96.94 விழுக்காடு ஆக உள்ளது.
திருமண மண்டபங்கள், பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், சினிமா திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
குஜராத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.28) மாலை நிலவரப்படி 3,589 கோவிட் பாதிப்பாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்த பாதிப்பாளர்கள் இரண்டு லட்சத்து 60 ஆயிரத்து 901 ஆக உள்ளன. இறப்பு 4 ஆயிரத்து 385 ஆக பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: ராஜ்கோட்டில் எய்ம்ஸ், நரேந்திர மோடி அடிக்கல்!