நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் (பிப். 16) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் ஒன்பதாயிரத்து 121 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 81 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.
கோவிட் - 19 பாதிப்பு நிலவரம்
இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே ஒன்பது லட்சத்து 25 ஆயிரத்து 710 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 872 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 813 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (பிப். 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு லட்சத்து 15 ஆயிரத்து 664 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மொத்தம் 20 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரத்து 298 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை சுமார் 85 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது ஃபாஸ்டேக் முறை