உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்த தகவல் பின்வருமாறு:
கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 ஆயிரத்து 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 84 லட்சத்து 62 ஆயிரத்து 80 ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (நவ.06) ஒரே நாளில் 577 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 562ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்து 19 ஆயிரத்து 886ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த ஐந்து லட்சத்து 16 ஆயிரத்து 632 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 92.41 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.48 விழுக்காடு உள்ளது.
இதுவரை மொத்தம் 11 கோடியே 65 லட்சத்து 42 ஆயிரத்து 304 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று (நவ.06) ஒரே நாளில் 11 லட்சத்து 13 ஆயிரத்து 209 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேபோல், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.