ETV Bharat / bharat

2 லட்சத்தைக் கடந்த கரோனா உயிரிழப்புகள் - கரோனா உயிரிழப்புகள்

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

COVID-19: Indias death toll breaches 2 lakh mark with 3,293 deaths in last 24 hrs

author img

By

Published : Apr 28, 2021, 1:02 PM IST

டெல்லி: நாட்டில் கரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்தப் புள்ளி விவரத் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 60 ஆயிரத்து 960 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

நேற்று ஒரேநாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் இரண்டு லட்சத்து 61 ஆயிரத்து 162 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், மூன்றாயிரத்து 293 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சத்து 17 ஆயிரத்து 371 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து ஆயிரத்து 187 ஆக உள்ளது.

இதையடுத்து தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.