புதுடெல்லி: இந்தியாவில் கரோனா 2வது அலை நாள்தோறும் புதிய உச்சத்தை அடைகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 498 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 540 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 15 கோடியே 22 லட்சத்து 45 ஆயிரத்து 179 டோஸ் கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.