டெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்று ஒரேநாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 25 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 ஆக உள்ளது.
நேற்று ஒரேநாளில் இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டாயிரத்து 812 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 13 ஆயிரத்து 658 ஆக உள்ளது.
இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 123 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி தெரியவருகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துவரும் நிலையில், கரோனா தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் நோக்கில் இதுவரை 14 கோடியே19 லட்சத்து11 ஆயிரத்து 223 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.