இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டிற்கான ஒப்புதல் தொடர்பான ஆலோசனையை மத்திய மருந்தக தரக் கட்டுப்பாட்டுக் குழு மேற்கொள்கிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்புட்னிக் V தடுப்பூசியை அவசரப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கும் டாக்டர் ரெட்டி நிறுவனம் கோரிக்கைவைத்துள்ளது.
ஸபுட்னிக் தடுப்பூசியின் பாதுகாப்பு, மூன்றாம் கட்ட ஆய்வுகளின் முடிவுகள் குறித்து டாக்டர் ரெட்டி நிறுவனம் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளது. இன்றைய ஆலோசனையில் ஒப்புதல் குறித்து முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கமேலயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அந்நாடு ஆகஸ்ட் 11ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் தேவகௌடாவுக்கு கோவிட்-19 பாதிப்பு