நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (பிப். 21) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 14 ஆயிரத்து 254 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 90 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.
கோவிட் - 19 நிலவரம்
இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே ஒன்பது லட்சத்து 91 ஆயிரத்து 651 பேர் கரோனா காரணமாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 302 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
பரிசோதனை நிலவரம்
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் நேற்று (பிப். 20) வரை 21 கோடியே ஒன்பது லட்சத்து 31 ஆயிரத்து 530 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இதுவரை சுமார் ஒரு கோடியே 10 லட்சத்து 85 ஆயிரத்து 173 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...கேரளாவை துரத்தும் புதிய பாக்டீரியா தொற்று!