டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 44,877 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தினசரி 50,000 பேர் தொற்று அடைவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (பிப். 12) ஒரே நாளில் இந்தியா முழுவதும் கரோனவால் 684 நபர்கள் இறந்துள்ளனர் என இன்று (பிப். 13) வெளியான அறிக்கையில் பதிவிடப்பட்டுள்ளன.
இதுவரை, இந்தியாவில் கரோனா தொற்றால் 5 லட்சத்து 8 ஆயிரத்து 665 பேர் இறந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கரோனவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 37 ஆயிரத்து 45 ஆக உள்ளது. இதில் கேரளாவில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 118 நபர்கள் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா (56,206) மற்றும் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடும் (47,643) உள்ளன.
இந்தியாவில் தொற்று விகிதம் குறைந்து தினசரி விகிதம் 3.17 ஆகவும், வாராந்திர தொற்று விகிதம் 4.46 ஆகவும் உள்ளது. மேலும் இந்தியாவில் கரோனாவில் பாதிப்படைந்த 97.55 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க:எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்.14 முதல் வகுப்புகள் தொடக்கம்