ETV Bharat / bharat

கோவிட்-19: நாட்டில் புதிதாக 15,981 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 981 பேர் கரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19
COVID-19
author img

By

Published : Oct 16, 2021, 12:16 PM IST

டெல்லி: நாட்டில் ஒரேநாளில் 15 ஆயிரத்து 981 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 40 லட்சத்து 53 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் மட்டும் எட்டாயிரத்து 867 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 166 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 51 ஆயிரத்து 980 ஆக உள்ளது.

தடுப்பூசி அதிகரிப்பு

கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 808 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோரின் மொத்த என்ணிக்கை மூன்று கோடியே 33 லட்சத்து 62 ஆயிரத்து 709ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கடந்த 24 மணி நேரத்தில் எட்டு லட்சத்து 36 ஆயிரத்து 118 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 97 கோடியே 23 லட்சத்து 77 ஆயிரத்து 45 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, இரண்டு லட்சத்து ஆயிரத்து 632 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும், இன்று (அக். 16) காலை 7 மணி நிலவரப்படி, நாட்டில் இதுவரை 97.23 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கு எல்லையில் படுகொலை: ஒருவர் சரண்; விவசாய அமைப்பு கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.