டெல்லி: நாட்டில் ஒரே நாளில் 14 ஆயிரத்து 313 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகள் மூன்று கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் 181 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகள் நான்கு லட்சத்து 50 ஆயிரத்து 963 ஆக உள்ளது.
நாட்டில் தற்போது இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து 198 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தோர் எண்ணிக்கை மூன்று கோடியே 33 லட்சத்து 20 ஆயிரத்து 57ஆக உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் மட்டும் ஆறாயிரத்து 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 84 ஆக உள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதுவரை 95 கோடியே 89 லட்சத்து 78 ஆயிரத்து 49 பேரின் மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. நேற்று (அக். 11) மட்டும் 65 லட்சத்து 86 ஆயிரத்து 92 பேரின் சளி உள்ளிட்ட மாதிரிகள் சோதிக்கப்பட்டன.