மத்திய உள் துறை அமைச்சகம் ஒரு சிறப்பு விநியோகமாக, நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவுத் துறை, அதன் பரிந்துரையின்பேரில் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதில், 2021-22ஆம் ஆண்டிற்கான மாநிலப் பேரிடர் மறுமொழி நிதியத்தின் (எஸ்.டி.ஆர்.எஃப்) மத்திய பங்கின் முதல் தவணையாக, 8873.6 கோடி ரூபாய் மாநிலங்களுக்குத் தரப்படுவதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, எஸ்.டி.ஆர்.எஃப்.இன் முதல் தவணை நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி ஜூன் மாதத்தில் வெளியிடப்படுகிறது.
இருப்பினும், இயல்பான நடைமுறையைத் தளர்த்துவதில், எஸ்.டி.ஆர்.எஃப். வெளியீடு மேம்பட்டது மட்டுமல்லாமல், கடந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையின் பயன்பாட்டுச் சான்றிதழுக்காகக் காத்திருக்காமல் அந்தத் தொகை வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட தொகையில் 50 விழுக்காடு வரை, அதாவது 4,436.8 கோடி ரூபாயை மாநிலங்கள் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.டி.ஆர்.எஃப்.இன் நிதியில் மருத்துவமனைகள், வென்டிலேட்டர்கள், ஏர் பியூரிஃபையர்கள், ஆம்புலன்ஸ் சேவைகளை வலுப்படுத்துதல், கரோனா மருத்துவமனைகள், கரோனா பராமரிப்பு மையங்கள், நுகர்ப்பொருள்கள், வெப்ப பரிசோதனைக் கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சோதனை ஆய்வகங்கள், சோதனைக் கருவிகள், கட்டுப்பாட்டு மண்டலம் போன்றவை கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கு மாநில அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.