ETV Bharat / bharat

டெல்டா வகை கரோனாவுக்கு எதிராக செயல்படும் கோவாக்சின் தடுப்பூசி - Covaxin effective against Delta Plus variant of COVID

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்டா வகை கரோனா
டெல்டா வகை கரோனா
author img

By

Published : Aug 3, 2021, 8:51 AM IST

இது குறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆய்வில், "உடலில் இருக்கும் ஆன்டிபாடிகள், முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், கரோனா தொற்றில் இருந்து குணமானவர்கள் தடுப்பூசி செலுத்திய பிறகு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மதிப்பீடு செய்தோம். இதில் டெல்டா வகை கரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பரவிய டெல்டா வகை கரோனா தொற்று அதிகளவில் பரவி இந்தியாவில் இரண்டாம் அலை ஏற்பட வித்திட்டது. இந்த கோவாக்சின் தடுப்பூசி டெல்டா வகை கரோனா தொற்றில் இருந்து 65.2 விழுக்காடு பாதுகாப்பு தருகிறது. இதனையடுத்து டெல்டா வகை கரோனா தொற்று டெல்டா AY.1, AY.2, AY.3 என மூன்று திரிபுகளாக உருமாறியது.

இதில் AY.1 திரிபு இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரவ தொடங்கியது. இது சுமார் 20 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் வெளியான முடிவுகள் அடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசி டெல்டா, டெல்டா AY.1 தொற்றை மட்டுப்படுத்தும். இந்தத் தடுப்பூசி கரோனா தொற்றிலிருந்து 77.8 விழுக்காடு பாதுகாப்பை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆந்திராவில் ஐந்து நாள்களில் 153 பேருக்கு கறுப்புப் பூஞ்சை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.