ETV Bharat / bharat

’கோவாக்சின் பூஸ்டர் டோஸ்’ பரிசோதனை முடிவுகள் நவம்பர் மாதம் வெளியீடு? - அண்மை செய்திகள்

கோவாக்சின் தடுப்பூசியின் ’பூஸ்டர் டோஸ்’ குறித்த பரிசோதனை முடிவுகள், நவம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Covaxin Covaxin
Covaxin
author img

By

Published : Jun 30, 2021, 8:23 PM IST

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி, இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட பின், உடலில் ஆண்டிபாடிக்களை அதிகரிக்கும் வகையில் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் அவசரகாலப் பயன்பாடாக கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், முன்னதாக பூஸ்டர் டோஸ்கள் குறித்த பரிசோதனை டெல்லி, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைகளில் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கோவாக்சின் பூஸ்டர் டோஸ்களுக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை 12 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கான அனுமதி ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவுகள் கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் நோய் எதிர்ப்பு தன்மை, பாதுகாப்புத் தன்மை, எதிர்வினையாற்றும் விதம் ஆகியவை குறித்து மதிப்பிட உதவும் வகையில் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘கோவாக்சின்’ தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற மம்தா கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.